கொரோனா காரணமாக நவம்பர் 28 ம் தேதி மரணமடைந்த நடன இயக்குனர் சிவசங்கருடன் இரண்டாண்டுகளுக்கு முன் நடிகை சாயா சிங் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றிய சிவசங்கர் மாஸ்டர் 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்ட 800 க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

2008 ம் ஆண்டு வெளியான மகதீரா தெலுங்கு படத்தில் நடனம் அமைத்ததற்காக தேசிய விருது பெற்ற இவர் நடனம் அமைத்து 2003 ம் ஆண்டு தமிழில் வெளிவந்த திருடா திருடி படத்திற்காக தனுஷ் மற்றும் சாயா சிங் ஆடிய மன்மதா ராசா பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தது.

https://www.instagram.com/p/CAS96WmhqNc/

கடந்த ஆண்டு மே மாதம் தனது பிறந்தநாளின் போது சிவசங்கர் மாஸ்டருடன் நடனமாடிய வீடியோ-வை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார் சாயா சிங் அப்போது அது நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், 72 வயதான நடன இயக்குனர் சிவசங்கரின் மறைவுக்குப் பிறகு அவரது ரசிகர்கள் சாயா சிங் வெளியிட்ட இந்த விடியோவை இப்போது மீண்டும் வைரலாக்கி வருகின்றனர்.