டெல்லி: தன் மீதான பாலியல் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்ற முன்னாள் டிஜிபியின் கோரிக்கையை உச்சநீதி மன்றம் மீண்டும் நிராகரித்து உள்ளது.
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தான், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை 3 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், இந்த நிலையில், தன்மீதான பாலியல் வழக்கை ஆந்திர மாநிலம் நெல்லூர் அல்லது சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரியும் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை கோரியும் ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுமீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் யு.வி.லலித் அமர்வு இன்று விசாரணை நடத்தியது. அதைடுத்த டிஜிபியின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கமறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.