பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஃபைனலி யூடியூப் சேனலுடன் இணைந்து டிஜிட்டல் தளத்தில் கால்பதிக்க உள்ளது.
இதுகுறித்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவன தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா கூறுகையில், “டிஜிட்டல் தளம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் விரிவடைந்துவருவதால், இந்த டிஜிட்டல் உலகத்திற்குள் நாங்களும் ஒரு பயணத்தைத் தொடங்க விரும்பினோம். இந்த நோக்கத்தின் அடிப்படையில், உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் மக்களைத் தனித்துவமான பொழுதுபோக்கு மற்றும் நகைச்சுவை மிளிரும் கதைகளுடன் மகிழ்வித்துவரும் ஃபைனலி போன்ற சூப்பர் லீக் சேனலுடன் கூட்டு சேர்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த இரு நிறுவனங்களும் இணைந்து திரைப்படங்களுக்கான ஓடிடி தளத்தை உருவாக்கவுள்ளதாகவும் கூறினார்.