சென்னை:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பால் மக்கள் நிர்க்கதியாக்க நிற்கின்றனர். பல இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கி, விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தில் நீர்நிலைகளைத் தூர்வாராததே வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்குக் காரணம். ஆனால் தமிழ்நாட்டில் மாறி மாறி ஆட்சி செய்த அதிமுகவும், திமுக இதற்கு நிரந்தர தீர்வு காணவில்லை. தற்போது தமிழகத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]