சென்னை:
ம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை  என்று கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் பதில் அளித்துள்ளார்.
அதிமுக அரசின் அம்மா மருந்தகம் உள்ளிட்ட பல மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி திமுக அரசு மூடு விழா நடத்துவது கண்டிக்கத்தக்கது மலிவு விலையில் மருந்துகள் விற்கும் அம்மா மருந்தகங்கள் மூடும் நடவடிக்கை கைவிடவேண்டும். தொடர்ந்து நடத்த வேண்டும் எனத் தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில்,  அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை  என்று கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை; மாறாக அவற்றின் எண்ணிக்கை 126ல் இருந்து 131-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.