வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (19.11.2021) அறிவித்தார்.

இதற்கு பலரும் தங்களின் ஆதரவையும் கருத்துகளையும் தெரிவித்துவருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் பிரகாஷ் ராஜ் “எனது தேசத்தைச் சேர்ந்த அயராது போராடும் விவசாயிகள் மன்னரை மண்டியிட வைத்துள்ளனர்” எனக் குறிப்பிட்டு ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிவருகிறது.