
சூர்யா நடித்திருக்கும் எதற்கும் துணிந்தவன் படம் 2022 பிப்ரவரி 4 வெளியாகும் என்ற சன் பிக்சர்ஸின் அறிவிப்பால் 2022 பொங்கலுக்கு அஜித்தின் வலிமை தனியாக வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எதற்கும் துணிந்தவனில் சூர்யா, ப்ரியங்கா அருள் மோகன், வினய், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு, இளவரசு, ரெடின் கிங்ஸ்லி உள்பட ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது.
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் படத்தில் வருவதாக உலவும் செய்தி எதற்கும் துணிந்தவனை மேலும் ஸ்பெஷலாக்குகிறது.
சன் பிக்சர்ஸின் இந்த அறிவிப்பால் 2022 பொங்கலுக்கு வலிமை தனியாக எந்தப் போட்டியும் இல்லாமல் வெளியாக வாய்ப்புள்ளது.
Patrikai.com official YouTube Channel