வேலூர்: தொடர் மழையின் காரணமாக காகிதபட்டறை பகுதியில் அருகே உள்ள மலையில் இருந்து பாறை உருண்டு விழுந்ததில், வீட்டுக்குள் இருந்த தாய் மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல வாலாஜாபாத் அருகே தலைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.
வடகிழக்கு பருவமமைழை காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வானிலை நிலவரத்துக்கு ஏற்ப பல பகுதிகளில் மிதமான மழையும், சில பகுதிகளில் கனமழையும் கொட்டி வருகிறது. அதுபோல, வேலூர் மாவட்டத்தில் பெய்து தொடர் மழையின் காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது. வேலூர் அருகே உள்ள காகிதபட்டறை பகுதியில் , மாலைப்பகுதியில் இருந்து ராட்சத பாதை ஒன்று உருண்டுமலை அடிவாரத்தில் இருந்த ரமணி என்பவர் வீட்டின் மீது விழுந்தது. இதனால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளுக்குள் அந்த வீட்டில் வசித்து வந்த 45 வயதான ரமணி மற்றும் அவரது 24 வயதான மகள் நிஷாந்தி ஆகியோர் சிக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து அக்கப்பக்கத்தினர் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், தாய் ரமணியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட மகள் நிஷாந்தியை மீட்க இரவு முழுவதும் மீட்பு பணி நடைபெற்றது. பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு, 5 ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் மீட்பு பணி நடைபெற்றது. இந்நிலையில், நிஷாந்தி சடலமாக மீட்கப்பட்டார்.
ரமணியின் கணவர் வேலைக்கு சென்றதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதுபோல, தொடர்மழை காரணமாக வேலூர் அருகே பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக வாலாஜாபாத் அவலூர் செல்லும் தரைப்பாலத்தில் வெள்ளம் சென்றுகொண்டிருகிறது. தரை பாலத்தை தாண்டி 20 ஆயிரம் கனஅடி நீர் செல்வதால் வாலாஜாபாத்தில் இருந்து அவலூர் மற்றும் அங்கம்பாக்கம், கம்பராஜபுரம், தம்மனூர்,இளையனார்வேலர், காவாந்தண்டலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங் களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 4வது நாளாக வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இதை சுற்றியுள்ள 12 பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.