கோலமாவு கோகிலா படத்தில் ரெடின் கிங்ஸ்லியை இயக்குனர் நெல்சன் சிறப்பாக பயன்படுத்தியிருந்தார். அவர் சீரியஸாக செய்யும் அனைத்தும் ரசிகர்களை சிரிக்க வைத்தது.
அதன் பிறகு ஒருசில படங்களில் தலைகாட்டினாலும் சமீபத்தில் வெளியான டாக்டர் படமே ரெடின் கிங்ஸ்லியை மீண்டும் பேச வைத்தது.
இவரை அழைத்து பாராட்டிய வடிவேலு தனது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ரெடின் கிங்ஸ்லியையும் இணைத்துக் கொண்டுள்ளார்.
சுராஜ் இயக்கும் இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. வடிவேலு பிரதான வேடத்தில் நடிக்கும் இந்தப் படம் வடிவேலின் செகண்ட் இன்னிங்ஸின் தொடக்கமாக இருக்கும் என்பதால் அனைவரும் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.