ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 25.31 கோடியை தாண்டியது. பலி எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்தது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருந்தாலும், உருமாறிய நிலையில் கொரோனா பரவல் நீடித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 253,203,758 கோடியாக உள்ளது. இதுவரை 228,993,776 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5,104,030 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது உலகம் முழுவதும் ,91,08,080 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 76,987 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு 4,78,29,189 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,82,869 பேர் உயிரிழந்துள்ளனர். 2வது இடத்தில் இந்தியாவும், 3வது இடத்தில் பிரேசிலும், 3வது இடத்தில் இங்கிலாந்தும், 4வது இடத்தில் ரஷ்யாவும் இருந்து வருகிறது.