சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில்,  மாநிலம் முழுவதும் நாளை (14ந்தேதி) 8வதுவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளை, தமிழகஅரசு முனைப்புடன் செலுத்தி வருகிறது. இதுவரை 7 கட்ட மெகா முகாம்கள் நடத்தி கோடிக்கணக்கானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது. கடந்த 7வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும் 1600 இடங்களில் நடைபெற்றது. இதையடுத்து, 8வது கட்ட மெகா மருத்துவ முகாம் நாளை மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது.

மாநிலம் முழுவதும் நடைபெறும் இந்த மெகா முகாமில், சென்னையில் மட்டும்  750 முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் இதுவரை 493 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழைக்கு பிறகு டெங்கு பாதிப்பு குறையும் என நம்புவதாக கூறினார். டெங்கு குறித்து மத்திய அரசின் குழு தமிழகத்தில் ஆய்வு நடத்தி சென்றுள்ளது என்பதையும் தெரிவித்தார்.

நீட் விலக்கு மசோத தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய அரசுக்கு பரிந்துரைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை 9,150ஆக உயர்ந்துள்ளது. கோவை மருத்துவ கல்லூரிக்கு கூடுதலாக 50 மாணர்வகள் சேர்க்க அனுமதி கிடைத்திருக்கிறது.

இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாளை மாநலிம் முழுவதும மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 71 சதவீதத்தில் இருந்து 72 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாளை சென்னையில் 750 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.