சென்னை: மழை முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அம்மா உணவகத்தை திமுக அரசு விரைவில் மூடிவிடும் என அதிமுகவினர் கூறி வந்த நிலையில்  மழை முடியும் வரை அம்மா   உணவகத்தில் இலவச உணவு வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்து உள்ளார்.
மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் சென்னையில் இன்று 3வது நாளாக முதலமைச்சர்   மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். வடசென்னை பகுதிகளான புளியந்தோப்பு, வேப்பேரி, பெரம்பூர் கொளத்தூர் வில்லிவாக்கம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
போரூர் , கொளத்தூர் முகாம்களை பார்வையிட்ட முதலமைச்சர் அங்கு தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்டு பார்த்தார். மேலும் கொரட்டூர், போரூர் எரிகளையும் ஆய்வு செய்தார். போரூர் அம்மா உணவகத்திலும் உணவின் தரத்தை சோதித்து பார்த்தார். இங்கு தயாரிக்கப்படும் உணவு கள் தான் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு கொடுக்கப்படுகிறது. கொளத்தூர், வில்லிவாக்கம் பகுதிகளில் ஆய்வின்போது மக்களுக்கு உணவும் நிவாரணப்பொருள்களும் வழங்கினார்.
பின்னர், ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வரிடம்,  அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், எப்படிப்பட்ட ஏற்பாடு கள்  செய்யப்பட்டுள்ளது என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 560 மோட்டார்கள் வெளியேற்றப்படுகிறது. மழை  பாதிப்பு முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
தி.நகர் ஸ்மார்ட் சிட்டி, மழைநீர் வடிகால் திட்டங்களில் சொல்ல முடியாத அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது என்றும், இது தொடர்பாக  எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.