
பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப் போவது யாரு, பிக் பாஸ் ஜோடிகள் என விஜய் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பணியாற்றியவர் நடிகை வனிதா விஜயகுமார்.
மறுபுறம் மூன்றாவது கணவர் பீட்டர் பாலை விட்டு பிரிந்த வனிதா, படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர். பிரசாந்தின் அந்தகன், பவர் ஸ்டாருடன் பிக்கப் ட்ராப், வசந்தபாலனின் புதிய படம் ஆகியப் படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார் தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார். பெண்களுக்கான ஆடை, அலங்காரம், மேக்கப் போன்ற பொருட்களை உள்ளடக்கிய கடையை புதிதாக திறந்துள்ளார் வனிதா.
— Vanitha (@vanithavijayku1) October 31, 2021
Patrikai.com official YouTube Channel