சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், குமரிக்கடல் பகுதியில் நிலவும்குறைறந்த காற்றத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி அடுத்த 24மணி நேரத்தில் தென்கிழக்கு அரப்பிக்கடல் பகுதிக்கு நகரக்கூடும். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் இன்றும் நாளையும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
மேலும், விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் கனமழையும், பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பவர் 4ந்தேதி மற்றும் நவம்பர் 6ந்தேதி வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.