பாஸ்டன்

மூன்றாம் தவணை பூஸ்டர் கொரோனா தடுப்பூசியால் பல கொடிய நோய்கள் தடுக்கப்படும் என லான்செட் நிறுவன ஆய்வு தெரிவித்துள்ளது.

உலகையே ஆட்டி வைக்கும் கொரோனா நோய்க்குத் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  உலக அளவில் தற்போது தினசரி பாதிப்பு சுமார் 4 லட்சம் வரை உள்ளது.   பொதுவாக கொரோனா தடுப்பூசிகள் இரு டோஸ்கள் போடப்படுகின்றன.  இந்நிலையில் பல நாடுகளில் பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாம் டோஸ் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

இது குறித்து உலகின் மிகப்பெரிய தடூப்ப்ப்ச்சி நிறுவனமான பிஃபிஸர் நிறுவனம் மருத்துவ ஆய்வு அமைப்பான லான்செட் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.  அந்த ஆய்வு  சுமார் 7,28,321 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது.  இவர்கள் அனைவரும் 3 ஆம் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட 12 வயதுக்கு மேற்பட்டவர் ஆவார்கள்.  இந்த ஆய்வு ஏற்கனவே இரு டோஸ்கள் மட்டும் போட்டுக் கொண்ட 7,28,321 பேரிடம் செய்யப்பட்ட ஆய்வுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்குச் சக்தி அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.   ஏற்கனவே இரு டோஸ்கள் போட்டுக் கொண்டவர்களை விட இவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தது தெரிய வந்துள்ளது.   இவர்களில் 93% பேருக்கு கொரோனா அபாயம் முழுவதுமாக ஏற்பட வாய்ப்பில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் மூன்றாவது பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்டவர்களுக்கு பல தீவிர கொடிய நோய்கள் ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்துள்ளது.  மேலும் இவர்களில் 81% பேருக்கு கொரோனா மரணம் ஏற்படும் வாய்ப்பு குறைவாகக் காணப்பட்டுள்ளது.   இந்த நிலை ஆண் பெண் இருபாலர் மற்றும் வயது வித்தியாசமின்றி காணப்பட்டுள்ளது.