சென்னை: அரசின் பயன்களை பயனர்கள் எளிதில் பெற ‘தமிழ்நாடு பேமென்ட் வங்கி’ ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.

அரசுத் துறைகள் மூலம் பயனாளிகளுக்கு திட்டங்களை எளிய முறையில், எந்தவித இடைத்தரகர் இன்றி, ஊழலுக்கு இடம் கொடுக்காமல் கொண்டு செல்ல ‘தமிழ்நாடு பேமெண்ட் வங்கி’ உருவாக்குவதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு  வருவதாகவும், அதற்கான அனுமதி விரைவில்  பெறப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

திமுக அரசு பதவி ஏற்றதும் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் நடைபெற்றுமுடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில்   தமிழ்நாடு பேமெண்ட் வங்கி உருவாக்கப்படும் என்றும், இதன்மூலம் அரசு கருவூலங்களை விரிவுபடுத்தும் திட்டத்திலும், மக்கள் நேரடியாக பயன் அடையும் வகையில் இந்த பேமண்ட் வங்கி உருவாக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் செய்தியளார்களை சந்தித்த அமைச்சர்,  பயனாளிகளுக்கு திட்டங்களை கொண்டு செல்ல ‘தமிழ்நாடு பேமெண்ட் வங்கி’ விரைவில்  உருவாக்கப்படும் என்று கூறியதுடன், அரசு கருவூலம், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் கருவூலங்கள் இதன் மூலம் விரிவுபடுத்தப் பட்டு. அவர்கள் பணம் செலுத்தும் வங்கியாக இந்த வங்கி செயல்படும். அதற்கான அனுமதி விரைவில் பெற்றுத்தரப்படும்.

மேலும், பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடர்பாக தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார் என்றும், நகை கடன் முறைகேடுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு நிதி பரிமாற்றங்கள் கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழக அரசு தொடங்க இருக்கும் `பேமென்ட் பேங்க்’குக்கு  இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது. இதற்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி கிடைக்குமானால், இந்தியாவிலேயே `பேமென்ட் பேங்க்’ ஆரம்பிக்கும் முதல் மாநிலம் என்கிற பெருமை தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும்.

`பேமென்ட் பேங்க்’ என்பது சிறிய அளவிலான வங்கிச் சேவை. இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு ஆகியவற்றைத் தொடங்கலாம். இந்த வங்கியில் வாடிக்கையாளர் ஒருவர் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். இதற்கான வட்டியும் வழங்கப்படும்.

ஏற்கனவே பேமென்ட் வங்கியை இந்திய தபால் துறை செயல்படுத்தி வரும் நிலையில்,  ஜியோ, ஏர்டெல், பேடிஎம்  உள்பட பல தனியார் நிறுவனங்கள் செயல்படுத்தி வரும் நிலையில், தமிழகஅரசும், அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.