டில்லி
இந்தியாவில் நேற்று 12,912 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,42,72,677 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,912 அதிகரித்து மொத்தம் 3,42,72,677 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 445 அதிகரித்து மொத்தம் 4,58,219 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 14,664 பேர் குணமாகி இதுவரை 3,36,48,179 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,53,083 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 614 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 66,09,906 ஆகி உள்ளது நேற்று 26 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,40,196 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,148 பேர் குணமடைந்து மொத்தம் 64,49,186 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 16,905 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 7,427 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 49,61,490 ஆகி உள்ளது. இதில் நேற்று 358 பேர் உயிர் இழந்து மொத்தம் 31,514 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 7,166 பேர் குணமடைந்து மொத்தம் 48,50,742 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 78,705 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 347 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,88,041 ஆகி உள்ளது இதில் நேற்று 10 பேர் உயிர் இழந்து மொத்தம் 38,071 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 255 பேர் குணமடைந்து மொத்தம் 29,40,673 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 8,708 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,021 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 27,01,614 ஆகி உள்ளது இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,097 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,172 பேர் குணமடைந்து மொத்தம் 26,53,832 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 11,685 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 349 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,66,065 ஆகி உள்ளது. நேற்று இருவர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,369 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 536 பேர் குணமடைந்து மொத்தம் 20,47,047 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,649 பேர் சிகிச்சையில் உள்ளனர்.