சென்னை: தமிழக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு எதிரான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் கே.கே.நகர் வாக்குச்சாவடிக்கு சென்று பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதாக திமுகவைச் சேர்ந்த தற்போதைய அமைச்சர்களான தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் மீது, அப்போதைய அதிமுக அரசு வழக்கு போட்டது. இந்த வழக்கு கடந்த 15ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், தற்போது அமைச்சராக விட்டதால், தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுவீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கில், 10 ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்த விசாரணையும் நடக்கவில்லை என மனுதாரர் தரப்பு வாதிட்டது. அதுபோல காவல்துறை சார்பிலும், எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், அந்த கலவரத்தின்போது கார் தீ வைக்கப்பட்டதா என்று சேத மதிப்பீடு ஏதும் தெரிவிக்கவில்லை. அதனால், வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.