சென்னை
இன்று மீண்டும் பெட்ரோல் விலை உயர்ந்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.13க்கு விற்கப்படுகிறது.
தினசரி சர்வதேசச் சந்தையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப கச்சா எண்ணெய் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வின் எதிரொலியாக, நாளுக்கு நாள் எரிபொருட்களின் விலையை உயர்த்தி வருகின்றன.
மக்கள் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் நிலையில், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான பயன்பாடு அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய்க்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையொட்டி கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்று இந்தியாவில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளன. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்து 105 ரூபாய் 13 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதைப் போல் டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து, 101 ரூபாய் 25 காசுகளுக்கு விற்பனையாகிறது.