சென்னை

ர்ச்சைக்குரிய டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டு கைதான பாஜகவைச் சேர்ந்த கல்யாண ராமன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 

பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் டிவிட்டரில் பல பதிவுகள் இட்டு வந்தார்.  அவரது பல பதிவுகள் சர்ச்சைகளை சந்தித்துள்ளன.   இந்நிலையில் கல்யாணராமன் தனது டிவிட்டரில் மக்களிடையே மத வெறுப்புணர்வு மற்றும் கலவரம், மோதல்களைத் தூண்டும் விதத்தில் கருத்துக்களைப் பதிவிட்டதாக வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கல்யாணராமனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  ஏற்கனவே இது போலப் பல வழக்குகளில் கல்யாணராமனுக்குத் தொடர்பு உள்ளதால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. 

இந்நிலையில் கல்யாண ராமன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமக்கு ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார்.   அவரது ஜாமீன் மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் ஜாமீன் அளிக்க மறுத்து கல்யாண ராமன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவு இட்டுள்ளார்.