சென்னை: மின்துறையில் ஊழல் ஆதாரமில்லாமல் டிவிட்டரில் அவதூறு பரப்பியதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலையிடம் 500 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு த BGR நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தன்னிடம் சில ஆடுகள்தான் உள்ளது, என பதில் தெரிவித்து உள்ளார். இது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் அண்ணாமலையை நேட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஏராளமான குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார். மின்சாரத்துறையில் ஊழல் செய்வதாக குற்றம் சாட்டியதுடன், அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய திட்டமிடுவதாகவும், ‘தற்போது நலிவடைந்துள்ள நிலையிலுள்ள ஒரு மின்நிலையத்தை, ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவர் வாங்கி, அதன் வாயிலாக, ரூ.5,000 கோடிக்கு மின்சாரம் விற்க, தமிழக மின்வாரியத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஆளுங்கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்களும் லாபத்தை ஈட்டுவதற்காகத்தான் இந்த ஒப்பந்தம் நடக்கிறது என குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், அந்த நிறுவனம் எது, இந்த முறைகேட்டில் ஈடுபடும் அமைச்சர் யார் என்பதை வெளியிட விரும்பவில்லை என்றும், திமுக மீண்டும் திரும்பவும் 2006 -11 பாதைக்குப் போக மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படிப் போகும்போது, பா.ஜ.க-வுக்கு வேறு வழியில்லை, ஒப்பந்தப் பேச்சு குறித்து எங்களிடம் உள்ள ஆவணங்களை மக்கள் முன் வெளியிடுவோம்’ என்று பேசியிருந்தார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்திருந்தார். ஆதாரம் இருந்தால் அண்ணாமலை வெளியிட வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கொந்தளித்தார். இதையடுத்து, மின்சார வாரியம் சார்பில் வழங்கப்பட்ட பண பட்டுவாடா விவரங்கள் கொண்ட எக்செல் சீட் ஒன்றை அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டார். இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதன் ஒரு பகுதியாக மின்சாரத்துறையில் முறைகேட்டில் ஈடுபடுகிறது என பி.ஜி.ஆர் நிறுவனத்துக்கு எதிராகவும் அண்ணாமலை பேசியிருந்தார்.
இதையடுத்து, அண்ணாமலை 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று பி.ஜி.ஆர் நிறுவனம் அவருக்கு நோட்டீஸ் வழஙகி உள்ளது. அதில், ‘பி.ஜி.ஆர் நிறுவன இயக்குநர் ரமேஷ் குமார் குறித்து ட்விட்டரில் அவதூறாக பதிவிட்டு அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால் 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்கவேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிவிட்டடில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, ‘சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றீர்கள். நான் ஒரு சாதாரண விவசாயி. என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான். தி.மு.க அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை. நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது. சந்திப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலையின் டிவிட்டும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.
அண்ணாமலையின் வேட்புமனு தாக்கலின் போது கொடுக்கப்பட்ட சொத்து விவர நகல்களும் ஷேர் செய்யப்பட்டு இதுதான் ஒரு சாதாரண விவசாயியின் வருமானமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சாதாரண ஆடுகளை வைத்துள்ள அண்ணாமலைதான் ஆப்பிள் ஐபோன் வைத்துள்ளார் என்று நக்கல் அடித்துள்ளனர்.
அட வெறும் ஆடு வச்சுருக்குறவரு ஐபோனும் சேத்து வச்சுருக்காரு. நான் சொல்லல அவரே மாட்டிகிட்டாரு.
அடே 2 ஆடுகளை மேய்க்கும் போது எதற்காக ஐ போன் எடுத்து வந்த,அதிலிருந்து இந்த டிவீட்களை போட்டு இருக்க…டேய் டகால்டி என்று கலாய்த்துள்ளனர்.
திமுக எம்.பி. செந்தில்குமார் தமது டிவிட்டர் பக்கத்தில், என்ன ஒண்ணுமே புரியல – இப்போ தான் மேல கைய வைச்சு பாரு வட்டியும் முதலும்மா திருப்பி கொடுப்போம் என்று சொல்லிட்டு வழக்கு போட போறாங்க என்றதும் சாதாரண விவசாயியா மாறிடறாங்க. பாவம் இதுல அவர் வளர்க்கும் ஆடுகள் வேற ஏன் சமந்தம் இல்லாம உள்ளே இழுத்து விடுறாங்க என கிண்டலடித்துள்ளார்.