
டெல்லியில் 67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணைமந்திரி எல். முருகன் மற்றும் விருது பெறுவோர்கள் கலந்துகொண்டனர்.
அசுரன் படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறன் தேசிய விருதை பெற்றார். வெற்றிமாறன் தேசிய விருது பெறுவது இது இரண்டாவது முறையாகும்.
அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுசுக்கு வழங்கப்பட்டது. தனுஷ் தேசிய விருது பெறுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது பெற்றிருந்தார்
இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் தேசிய விருது பெற்ற புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு மகிழ்வும் நெகிழ்வும் தந்த தருணம் என பதிவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]மகிழ்வும் நெகிழ்வும் தந்த தருணம் @VetriMaaran @dhanushkraja #Asuran pic.twitter.com/J0Xhplw3Wm
— Kalaippuli S Thanu (@theVcreations) October 25, 2021