கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பின் சில தினங்களுக்கு முன்பு நடிகை சமந்தா – நடிகர் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர்.

இவர்கள் பிரிவுக்கு முக்கிய காரணம் சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பிரீதம் ஜுகல்கர் தான் என்று கூறப்பட்டு வந்தது.

இதைத் தொடர்ந்து சமந்தா-வின் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் சுமன் டிவி , யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டன.

இந்நிலையில், விவாகரத்து விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறாக தகவல்களை பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் வெங்கட் ராவ் என்கிற வழக்கறிஞர், தனது திருமண வாழ்க்கை குறித்தும், தனக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் தவறாக பேசியதால், அவர்மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சமந்தா.

இப்படி பல பிரச்சனைகளால் மன அழுத்தத்தில் இருக்கும் சமந்தா தனது தோழியான ஷில்பா ரெட்டியுடன் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளார். இருவரும் ஒன்றாக செல்வதை உறுதி செய்யும் வகையில் ஷில்பா ரெட்டி இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் தனி ஹெலிகாப்டர் முன் சமந்தா, ஷில்பா ரெட்டி நிற்கின்றனர். இருவரும் கேதர்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி உள்ளிட்ட கோயில்களுக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆன்மிக சுற்றுலா முடிந்து வந்த பிறகு சமந்தா நடிப்பில் கவனம் செலுத்த உள்ளாராம்.