சென்னை: ஜெயலலிதா சமாதியில் இன்று சசிகலா மரியாதை செலுத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் அதிமுகஅமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் கொடியை பயன்படுத்த உரிமை இல்லை என்றும் அவர், ஆஸ்கர் அளவுக்கு நடிக்கிறார் என்றும் கடுமையாக விமர்சித்தார்.
இன்று மாலைமுரசு நிறுவனர் ராமச்சந்திர ஆதித்தனார் 8ம் ஆண்டு நினைவு நாளை கொண்டாடப்படுகிறது. இதையாட்டி, அவரது படத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் கூறியதாவது,
அதிமுகவில் சசிகலாவுக்கு ஒருபோதும் இடம் இல்லை. அமமுகவில் வேண்டுமானால் டிடிவி தினகரன் இடம் கொடுக்கலாம். இவர்கள் நிராகரிக்கப்பட்ட சக்திகள். கட்சியை கைப்பற்றுவது பகல் கனவாக தான் இருக்கும் என்றார்.
சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தி வருகிறார். அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது. குழப்பத்தை ஏற்படுத்தவே அவர் அதிமுக கொடியை பயன்படுத்தி வருகிறர் என்றார்.
ஜெயலலிதா சமாதியில் எப்படி பல ஆயிரம் பேர் அஞ்சலி செலுத்துகிறார்களோ அதை போலதான் சசிகலாவையும் மக்கள் பார்ப்பார்கள் என்று கூறியவர் ஆஸ்கர் வழங்கும் அளவு நடித்தாலும் மக்கள் அதை நம்ப மாட்டார்கள் என்று காட்டமாக விமர்சித்தார்.
மேலும், தான்தான் சிறந்த முதல்வர்என தன்னைத்தான ஸ்டாலிஙன கொள்கிறார். யார் அவருக்கு சிறந்த முதல்வர் என்று விருது கொடுத்தார்கள் என கேள்வி எழுப்பியவர், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்று ஆளுநர் கூப்பிட்டு சொன்ன பிறகு தான் முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார், அதுபோல, கோயில் திறக்க உத்தரவிடுகிறார். தமிழ்நாட்டின் கள நிலவரம் ஆளுநருக்கு தெரிகிறது. அவர் வழிகாட்டுதல் படி தான் முதல்வர் செயல்படுகிறார் .
இவ்வாறு அவர் கூறினார்.
தொண்டர்கள் புடைசூழ ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் சசிகலா…