சென்னை: தமிழ்நாட்டில் 2 கட்டங்களாக நடைபெற்று முடிந்த 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் எத்தனை சதவிகிதம்? எத்தனை இடங்களை பிடித்தது என்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தப்படாமல் இருந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான . ஊராட்சி உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா் மற்றும் ஊராட்சி வார்டு  உறுப்பினர் பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் 2 கட்டங்களாக சனிக்கிழமை அக்டோபர் 3ந்தேதி மற்றும் 6ந்தேதி நடைபெற்றது.  அத்துடன் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவும் 9ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ந்தேதி நடைபெற்றது. 2 நாட்கள் வாக்குகள் எண்ணும் பணி நீடித்தது. இதில், வெற்றி பெற்ற கட்சிகளின் வாக்குகள் சதவிகிதம் குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இந்த தேர்தலில், கட்சிகள் கைப்பற்றிய இடங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ விவரத்தை மாநில தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

மாவட்ட கவுன்சிலர் பதவி

திமுக 89.54%,

அதிமுக 1.31%,

காங்கிரஸ் 5.23%,

மற்றவர்கள் 1.96% இடங்களை பிடித்துள்ளதாகவும்,

1.96% இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒன்றிய கவுன்சிலர் பதவி

திமுக 68.26%,

அதிமுக 14.85%,

காங்கிரஸ் 2.32%,

பாஜக 0.56%,

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 0.28%,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 0.21%,

தேமுதிக 0.07%

மற்றவர்கள் 12.46% இடங்களையும் 

0.91% இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கிராம ஊராட்சி தலைவர் பதவி

கிராம ஊராட்சி தலைவர் பதவிகளில் 99.2% இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், 0.96% இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளைப் பொறுத்தவரையில் 97.01% இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், 3.1% இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தை பார்வையிடலாம்…

https://tnsec.tn.nic.in/