சென்னை

ள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடம் கூட வெற்றி பெறாத நிலையில் கட்சித் தலைவர் கமலஹாசன் டிவிட்டரில் ஆறுதல் கூறி உள்ளார்.

இந்த ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சமக மற்றும் ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.  ஆனால் இந்த கூட்டணி தேர்தலில் படு தோல்வி அடைந்தது.  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்ட்யிட்டு தோல்வி அடைந்தார்.   அக்கட்சியை சேர்ந்த பலர் கட்சியை விட்டு விலகினர்.

தற்போது நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைக்காமல் கமலஹாசன் தனது கட்சியைத் தனியே போட்டியிட வைத்தார்.  இதில் ஏராளமானோர் அவர் கட்சி சார்பில் போட்டியிட்டனர்.  ஆனால் ஒரே ஒரு இடத்தில் கூட அவர் கட்சியினரால் வெற்றி பெறாமல் உள்ள நிலையில் ஏராளமானோர் டெபாசிட் இழந்துள்ளனர்.

இந்நிலையில் கமலஹாசன் தனது டிவிட்டரில்,

‘உள்ளாட்சியில் தன்னாட்சி’ எனும் லட்சியக்கனலை இதயத்தில் ஏந்தி தேர்தலைச் சந்தித்த மநீம வேட்பாளர்களைப் பாராட்டுகிறேன். வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மநீமவின் மக்கள் பணி இன்னும் விசையுடன் தொடரும்.’

என பதிவிட்டுள்ளார்.