ஸ்டாக்ஹாம் : 2021ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலகின் உயரிய விருதான நோபல் பரிசு ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகிறது. 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே  இயற்பியல், வேதியியல், மருத்துவம்,  அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது. மற்ற துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஸ்வீடன் தலைவர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகிறது.

அதன்படி, கடந்த வாரம் முதலே 2021ம் ஆண்டில் மருத்துவதுறை, இயற்பியல் துறை, வேதியியல், இலக்கியத்துறை மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை தேர்வுக்குழு அறிவித்துள்ளது. இந்த விருதானது 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. தொழிலாளர்களின் பொருளாதாரம் குறித்த பங்களிப்பிற்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

அதன்படி,  அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கார்ட், ஜோஸ்வா டி ஆங்க்ரிஸ்ட் மற்றும் கெய்டோ டபிள்யூ. இம்பென்ஸ் ஆகிய மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக ராயல் சுவீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் அறிவித்துள்ளது..

குறைந்தபட்ச ஊதியம், குடியேற்றம் மற்றும் கல்வி ஆகியவற்றின் தொழிலாளர் சந்தை விளைவுகளை பகுப்பாய்வு செய்துள்ளதற்காக டேவிட் கார்ட்டுக்கு ஒரு பாதியும்,

மற்றொரு பாதி ஜோசுவா டி. ஆங்கிரிஸ்ட் மற்றும் கைடோ டபிள்யூ இம்பென்ஸ் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]