ஷார்ஜா:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணிக்கு எதிராக ஷார்ஜாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேறியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  இந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 138  ரன்கள் எடுத்தது. இந்த அணியில் அணித்தலைவர் விராத் கோலி அதிகபட்சமாக 39 ரன்கள் அடித்தார்.
கொல்கத்தா நைட் ரைடர் அணியின் பந்து வீச்சாளர்களில் சுனில் நரேன் நான்கு விக்கெட்களையும், லோக்கி பெர்குசன் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர்.
138  ரன்களை வெற்றி இல்க்ககாக் கொண்டு களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த அணியில் சுப்மான் கில் அதிகபட்சமாக 29  ரன்கள் அடித்தார். அதிரடியாக விளையாடி வந்த கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டர் சுனில் நரைன் 26 ரன்களில் அவுட்டானார்.
ஐபிஎல் தொடரில் நாளை மறுநாள் (அக்டோபர் 13-ஆம் தேதி) ஷார்ஜாவில் நடக்க உள்ள இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோத உள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30  மணிக்குத்  தொடங்க உள்ளது.
இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் வெற்றி பெறும் அணி, வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 15-ஆம் தேதி) துபாயில் நடக்க உள்ள இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.