அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும் அனைவரின் பேச்சையும் அமைதியாகக் கேட்டு அவர்களுக்கு உரிய மரியாதையுடன் நடத்துபவர் மோடி என்று அமித்ஷா கூறினார்.

குஜராத் முதலமைச்சராக பதவியேற்று 20 ஆண்டு நிறைவடைந்ததை கோலாகலமாக கொண்டாடி வரும் பிரதமர் மோடி குறித்து பேசிய அமித் ஷா இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசியலில் இவரைப் பிடிக்காதவர்கள் தான் இவரை சர்வாதிகாரி போல் சித்தரிக்கின்றனர், ஆனால் பிரதமர் மோடி சர்வாதிகாரி அல்ல, ஜனநாயகத்தை பேணிக்காப்பவர் என்றும் கூறினார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவரத்திலோவா “இது மிகவும் நகைச்சுவையாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

1980 களில் மிக பிரபலமாக விளங்கிய அமெரிக்க வீரரான மார்டினா நவரத்திலோவா-வின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.