சென்னை: கோவிலுக்கு சொந்த இடங்களில் இருப்பவர்கள், அவர் செலுத்த வேண்டிய வாடகையை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலைய துறை அலுவலகத்தில், அறநிலையத்துக்கு உட்பட்ட கோவிலுக்கு சொந்த இடங்களில் வசிப்பவர்கள், வாடகைதாரர்கள், வாடகை கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் வசதியை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள வாடகைதாரர்கள் இணைய வழியில் வாடகை செலுத்தலாம் அதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் எவ்வளவு வாடகை பெறப்படுகிறது என்பதையும் சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம். நேரடியாக வாடகை செலுத்துவோரின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மேலும், மத்தியஅரசின் வலியுறுத்தல் காரணமாகவே கோவில்கள் திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பயம் நீங்கியவுடன் முதல் நடவடிக்கையாக கோயில்கள் திறக்கப்படும் என்றார்.