ராமானந்த் சாகரின் ராமாயண இதிகாச தொடர் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடரில் ராவணனாக நடித்தவர் அரவிந்த் திரிவேதி. நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 82.

300-க்கும் மேற்பட்ட இந்தி, குஜராத்தி படங்களில் நடித்துள்ளார். இதற்காக பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

திரைப்படத் தணிக்கைக் குழுவின் தலைவராகவும் இருந்தார். 1991-ம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யாகவும் இருந்தவர்.