பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான சாண்டி மாஸ்டர் நடித்துவரும் 3:33 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் டப்பிங் பணிகளும் முடிவடைந்து விட்டதாக கூறப்பட்டது.

நடன இயக்குநராக இருந்தவர் “3:33”, என்று பெயரிடப்பட்ட திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களான சரவணன், ரேஷ்மா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள் என்பதும், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3:33 திரைப்படத்தை பேம்பூ ட்ரீ புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் T.ஜீவிதா கிஷோர் தயாரிக்க இயக்குனர் நம்பிக்கை சந்துரு எழுதி இயக்கியுள்ளார். ஹர்ஷவர்தன் இசையமைத்துள்ளார்.

விரைவில் 3:33 திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று கூறப்படும் நிலையில் தற்போது சாண்டி மாஸ்டரின் புதிய மியூசிக் வீடியோ இன்று வெளியானது.

இசையமைப்பாளர் ஓஃப்ரா இசையமைத்துள்ள செம்ம போத பாடலுக்கு ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ளார். சாண்டி மாஸ்டரின் அசத்தலான நடனத்தில் வெளிவந்திருக்கும் செம்ம போத பாடல் சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.