லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் ‘விக்ரம்’ . இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் கமலின் 232வது திரைப்படம் . இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரனும், இசையமைப்பாளராக அனிருத்தும் பணிபுரிந்து வருகிறார்கள்.
‘விக்ரம்’ திரைப்படம் முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. கமல் ஹாசன் நடிக்கும் இந்தப் படத்தில், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் , ஷிவானி நாராயணன் மற்றும் நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சண்டைப் பயிற்சிக்கு இரட்டையர்களாக அன்பறிவ் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
கமலுக்கு மகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க காளிதாஸ் ஜெயராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு Behind The Scene (BTS) புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிறது. இந்த புகைப்படத்தில் பஹத் பாசிலுடன், விஜய் சேதுபதி இருக்கிறார். இவர்களுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். இந்த புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் சிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு பிக்பாஸ் பிரபலம் இணைந்துள்ளார். அதன்படி, பிக்பாஸ் பிரபலம் சாண்டி, விக்ரம் படத்தில் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.