சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 26ந்தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் வங்கக்கடலில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்றி  காரணமாக பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வரும்  26-ம் தேதி வரை மழை பெய்யும் என்றும், சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்து உள்ளது.

இன்றைய தினம்  திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பெய்யக்கூடும்.

நாளை (24ம் தேதி)  தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

நாளை மறுதினம் (25 -ஆம் தேதி)  தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சிலஇடங்களில் இடி மின்னதுடன் கூடிய லேசானது முதல் மிதமான மனழபெய்யக்கூடும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னதுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

வரும் 26-ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னநடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னதுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

27 – ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வாளம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னதுடன் கூடிய லேசானறு மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளது.