சென்னை: மகாத்மா கற்றுத் தந்த தொண்டுள்ளமும் சகிப்புத்தன்மையும் நமது பாதையாகட்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துதெரிவித்து உள்ளார்.
தேசத்தந்தை காந்தியடிகள் மதுரையில் ஆடைப் புரட்சி செய்த இந்நாளை (செப்டம்பர் 22) நினைவுகூர்ந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மகாத்மா கற்றுத் தந்த தொண்டுள்ளமும் சகிப்புத்தன்மையும் நமது பாதையாகட்டும் எனக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மதுரை மேலமாசி வீதியும் 22-9-1921ஆம் இந்திய வரலாற்றின் திசையை மாற்றி எழுதியதன் நூற்றாண்டு! இந்திய மக்களின் துன்பங்களை உணர்ந்த அண்ணல் காந்தியடிகள் தன் மேலாடையைத் துறந்த அரை ஆடைப் புரட்சி நாள் இன்று! மகாத்மா கற்றுத் தந்த தொண்டுள்ளமும் சகிப்புத்தன்மையும் நமது பாதையாகட்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.
அவரது டிவிட்டில், மதுரை மேலமாசி வீதியும் 22-9-1921-ம் இந்திய வரலாற்றின் திசையை மாற்றி எழுதியதன் நூற்றாண்டு! இந்திய மக்களின் துன்பங்களை உணர்ந்த அண்ணல் காந்தியடிகள் தன் மேலாடையைத் துறந்த அரை ஆடைப் புரட்சி நாள் இன்று! மகாத்மா கற்றுத் தந்த தொண்டுள்ளமும் சகிப்புத்தன்மையும் நமது பாதையாகட்டும்! என்று புகழாரம் சூட்டியுள்ளார்.