திருப்பூர்:
மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வரும் மாணவர்களிடம் கொரோனா பயத்தை ஏற்படுத்தக் கூடாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகரில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் தற்போது வரையில் 56 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழக அளவில் திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. திருப்பூரில் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட தொற்று எவ்வித பாதிப்பும் இல்லாத தொற்று என்பதால் அச்சப்படத்தேவையில்லை என்றும் கூறினார்.
Patrikai.com official YouTube Channel