சென்னை: தமிழ்நாட்டின் 26-வது ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவி ஏற்றார். ஆளுநருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில்  முதல்வர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், நீதிபதிகள்  அதிகாரிகள், எதிர்க்கட்சி தலைவர் உள்பட பலர் பங்கேற்றனர்.

தமிழ்க ஆளுநராக இருந்த  பன்வாரிலால் புரோகித் அண்மையில் பஞ்சாப் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து, நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்த ரவீந்திர நாராயண ரவி   தமிழக ஆளுநராக இடமாற்றம் செய்து குடியரசுத் தலைவர் ஆணையிட்டார்.

இதைத்தொடர்ந்து,  புதிய கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்ந்தார். அவரை முதல்வர் உள்பட அமைச்சர்கள், உயர் அதிகாரகள் வரவேற்றனர்.

இந்த நிலையில், இன்று ஆளுநர் பதவி ஏற்பு விழா கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்றது. இன்று காலை 10.30 மணியளவில் தமிழகத்தின் 26-வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் மு.அப்பாவு, தலைமைச் செயலாளர், அமைச்சர்கள், கே.பி.முனுசாமி, வேலுமணி, வைத்திலிங்கம், தங்கமணி, தனபால் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், எம்.பி பாரிவேந்தர்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.