சென்னை: தமிழ்நாட்டின் நிதி தேவையை பூர்த்தி செய்து வருவதாக கூறப்படும் டாஸ்மாக் நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருவதாக தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில்தான் அதிக வருமானம் வருவதாகவும், அதனால் தான் டாஸ்மாக் கடைகளை திறப்பதில் தமிழக அரசு ஆர்வம் காட்டி வருவதாகவும் பலரும் கூறிவந்தனர். கடந்த அதிமுக அரசும் சரி, தற்போதைய திமுக அரசும் சரி, டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்துவதிலேயே குறியாக உள்ளனர். கொரோனா பொதுமுடக்கம் காலத்திலும், டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு, தமிழக அரசு வருமானம் ஈட்டி வந்தது.
இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த காசிமாயன் என்பவர் டாஸ்மாக் விற்பனை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விக்கு, டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது. அதனப்டி,
கடந்த 2010-11ம் ஆண்டில் ரூ.3.56 கோடி நஷ்டம், 2011-12ம் ஆண்டில் ரூ.1.12 கோடி, 2012-13ம் ஆண்டில் ரூ.103.64இ 2013-14ம் ஆண்டில் ரூ.64.44 கோடி. 2019-20ம் ஆண்டில் ரூ.64.44 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்து உள்ளது.
அதிகபட்சமாகக கடந்த 2004-05 நிதியாண்டில் டாஸ்மாக்கிற்கு ரூ.232.73 கோடி லாபம் கிடைத்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் விற்பனை குறித்த அரசின் தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.