சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இது வரை 4,06,269 பயனாளிகள் பயன் அடைந்துள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் 5,531 பேர் பயன் பெற்றுள்ளனர் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்து உள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்டு மாதம் 5ந்தேதி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய முதல்வர், இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டு இருப்பதாகவும், மருத்துவமனைகளை மக்கள் தேடி வரும் சூழலை மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றவர், ஒருகோடி மக்களுக்கு வீடு தேடி மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும் என்று கூறியவர், இந்த ஆண்டின் இறுதிக்குள் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று கூறினார்.
அதன்படி, நீரிழிவு, சர்க்கரை நோய், புற்றுநோய், காச நோய் , சிறுநீரக சிகிச்சை முடக்கு வாதம் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் போன்றவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை தமிழகஅரசு அவர்களின் வீடு தேடிச்சென்று இலவசமாக வழங்கி வருகிறது. கிராம மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இந்த திட்டம். இதனால், நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மருந்து மாத்திரைகளுக்கான செலவுகள் மறறும் மருத்துவமனைக்கு சென்று வரும் அலைச்சலும் மிச்சப்படுத்தப்படுத்தப்படுகிறது.
இநத் திட்டத்தின்மூலம், எவ்வளவு பயனடைந்து உள்ளனர் என்பது குறித்த விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி, நேற்று வரை (செப்டம்பர் 10ந்தேதி) 4,06,269 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இதில், நீரிழிவு (சர்க்கரை) நோய்க்காக 1,19,240 நபர்களும், உயர் இரத்த அழுத்த நோய்க்கு (பிரஷர்) 1,79,400 நபர்களும், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் 81,400 நபர்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 34 சிறுநீரக நோயாளிகளுக்கு செய்துகொள்வதற்கு தேவையான வைகளும் வழங்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 41,669 பயனாளிகளும் குறைந்த பட்சமாக மயிலாடுதுறையில் 1271 பயனாளிகளும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று குறிப்பாகச் சென்னையில் மட்டும் 14,268 பயனாளிகளும் பயன்பெற்று இருக்கிறார்கள்.
நேற்று ஒரே நாளில் மட்டும் 5,531 பயனாளிகள் பயன்பெற்று இருக்கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.