வெற்றிமாறன் படத்தை தமிழகத்தை தாண்டியும் எதிர்பார்க்கிறவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.
இந்நிலையில், அடுத்த வருடம் வெற்றிமாறன் தெலுங்குப் படத்தை இயக்குகிறார். வெங்கடேஷ், ராம் சரண் நடிக்கும் மல்டி ஸ்டாரர் படமாக இது இருக்கும், அத்துடன் ஜுனியர் என்டிஆர் நடிப்பில் ஒரு ஆக்ஷன் படத்தை எடுக்கவும் வெற்றிமாறன் திட்டமிட்டிருப்பதாக செய்திகளில் குறிப்பிட்டுள்ளனர்.
கோட்டா நீலிமாவின் ஷுஸ் ஆஃப் தி டெட் நாவலை படமாக்க திட்டமிட்டுள்ளார் வெற்றிமாறன். இந்த நாவல் ஆந்திரா பின்னணியில் எழுதப்பட்டது.