சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் , சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இயக்குனர் சிவாவின் கல்லூரிகால நண்பரும் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களின் ஒளிப்பதிவாளர் வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். “விஸ்வாசம்” படத்திற்காக தேசியவிருது வென்ற இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார்.
தீரன் அதிகாரம் ஒன்று, தலைவா படங்களில் வில்லனாக நடித்த நடிகர் அபிமன்யூ சிங், அண்ணாத்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இதற்கிடையில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4 ஆம் தேதி படம் வெளியாகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இதுவரை வெளியாகாத நிலையில், தற்போது அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வருகிற செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தரப்பிலிருந்து எந்த அப்டேட்ஸும் நேற்று மாலைவரை வெளியாகாத நிலையில், சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் அப்டேட் கேட்க ஆரம்பித்தனர். இது தொடர்பான ஹேஷ்டேக்குகள் இன்று காலைவரை ட்ரெண்டாகிவந்தன. இந்த நிலையில், ‘அண்ணாத்த’ படம் தொடர்பாக இரண்டு அப்டேட்டுகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை காளைக்கு 11 மணிக்கு ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டரும் வெளியாகவுள்ளது.
#Annaatthe va paaka ready ah?😎#AnnaattheFirstLook Tomorrow @ 11 AM | #AnnaattheMotionPoster Tomorrow @ 6 PM@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #AnnaattheFLTomorrow pic.twitter.com/t8ZwDk31Gz
— Sun Pictures (@sunpictures) September 9, 2021