ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கவுள்ள படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இது தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தைத் தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் 50-வது படமாக இது உருவாகிறது. இந்தப் படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார்.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இது ராம் சரணின் 15-வது படமாகவும்.

நாயகியாக கியாரா அத்வானி நடிக்க, நடன இயக்குநராக ஜானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார் .

#RC15 திரைப்படம் பூஜையோடு நேற்று தொடங்கியது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த பூஜையில் முன்னணி இயக்குநர் S.S.ராஜமௌலி, பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஆகியோர் கலந்து கொண்டனர். மெகா ஸ்டார் சிரஞ்சீவி கிளாப் செய்து படத்தை துவக்கி வைத்தார். WE ARE COMING என அசத்தலான #RC15 போஸ்டரும் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஷங்கர் – ராம்சரண் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘விஸ்வம்பரா’ எனப் பெயரிட படக்குழு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

[youtube-feed feed=1]