சென்னை: சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
மத்திய அரசு 2019ல் இயற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து, 2020ம் ஆண்டு ஜனவரியில் அமல்படுத்தியது. இந்த சட்டத்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதை கண்டுகொள்ளாமல் அமல்படுத்தி வருகிறது.
இந்த சட்டத்துக்கு எதிராக பல மாநில அரசுகள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இதுதொடர்பான தனிநபர் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். தொடர்ந்து பேசிய முதல்வர், ஒன்றிய அரசு 2019 ஆம் ஆண்டு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும், மதநல்லிணக்கத்திற்கும் உகந்ததாக இல்லை என்று பேரவை கருதுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், அகதிகளாக வருபவர்களை அவர்களின் நிலை கருதி அரவணைக்காமல் மத ரீதியாகவும், எந்த நாட்டிலிருந்து வருகிறார்கள் என்பதைப் பொருத்தும் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.. சிஏஏ சட்டம் இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம். மதச்சார்பின்மை கோட்பாடு, மத நல்லிணக்கத்திற்கு உகந்ததாக சிஏஏ சட்டம் இல்லை. அகதிகளாக வருவோரை மதரீதியாக பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் சி.ஏ.ஏ. சட்டம் உள்ளதுஎ ன குற்றம் சாட்டினார்.
முன்னதாக அதிமுக அவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில், அதுகுறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், சிஏஏக்கு எதிராக தீர்மானம் வந்ததால் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். “குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கும் தைரியம் அதிமுகவுக்கு இல்லை” என்று குற்றம் சாட்டியதுடன், இந்த ஆதரிக்க தைரியமில்லை என்பது தான் உண்மை என கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சிஏஏ-க்கு எதிராக தீர்மானம்….?