சென்னை:
ரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு நாளை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு நாளை முதல் செப்.1ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.58 மற்றும் பதிவு கட்டணம் ரூ.2 செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.