மணிப்பூர்:
ணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் இல.கணேசன். இவரை மணிப்பூர் மாநில ஆளுநராக நியமித்து இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னராக உள்ளார்.

முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யான இல. கணேசன் பா.ஜனதாவின் தேசியக்குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.