மதுரை

இன்று ஒரே நாளில் மல்லிகைப்பூ விலை மதுரை சந்தையில் கிலோ ரூ.2000 ஆக உயர்வு

 

மதுரையில் புகழ்பெற்ற பலவற்றில் மல்லிகைப் பூவும் ஒன்றாகும்.   பல மாவட்டங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து மல்லிகைப்பூ ஏற்றுமதி செய்யப்படுகிறது.   மதுரை மல்லிகைப்பூவுக்கு என்றும்,ஏ கிராக்கி உள்ளது.

இன்று வரலட்சுமி விரதம் மற்றும் முகூர்த்த நாள் ஆகும்.  எனவே மல்லிகைப்பூக்களின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது.  மல்லிகைப்பூவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது.  இந்த விலை ஏற்றம் நேற்றில் இருந்தே காணப்படுகிறது.

மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.500க்கு விற்கப்பட்டது.  இன்று ஒரே நாளில் மல்லிகைப்பூ விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  இன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2000க்கு விற்பனை ஆகிறது.   இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.