அருள்மிகு ஸ்ரீ ஸ்வர்ணாம்பிகை , பால சுகாம்பிகை உடனுறை ஸ்ரீ புஷ்பரதேஸ்வரர் திருக்கோவில்.
மூலவர் : ஸ்ரீ புஷ்பரதேஸ்வரர்.
உற்சவர் : ஸ்ரீ சோமஸ்கந்தர்.
தல விருட்ஷம் : நாகலிங்க மரம்.”
ஆகமம் : சிவாகமம்.
தீர்த்தம் : சூரிய புஷ்கரணி , சிம்ம தீர்த்தம்.
பழமை : சுமார் 1500 ஆண்டுகளுக்கு மேல்.
சூரியனே தெய்வங்களை வழிபட்ட கோயில்கள் மிக குறைவு. அதில் ஒன்று தான் இந்த ஞாயிறு திருத்தலம்.
கண் தொடர்பான நோய்கள் தீர இங்கு வந்து வழிபட அவை தீரும் என்பது நம்பிக்கை.
மேலும் திருமணமாகி பிரிந்து வாழும் தம்பதிகள் இக்கோயிலுக்கு வந்து சிவனுக்கு திபம் ஏற்றி வழிபட்டால் , பிரிந்த தம்பதிகள் சீக்கிரம் வாழ்வில் ஒன்றிணைவார்கள் என்றும், பல் சம்பத்தமான பிரச்சனைகள் தீரவும் இங்கு வழிபட்டால் நல்ல பலன் கிட்டும் என்றும் கூறுகின்றனர்.
ஞாயிறு.
திருவள்ளூர் மாவட்டம்.