சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தெருத்தெருவாக கூறியும் சிலர் முன்வருவதில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருண்ணன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருகிறது. இது கொரோனாவின் 3வது அலையின் தாக்கமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஏற்கனவே மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தபடி, கொரோனா 3வது அலை ஆகஸ்டில் தொடங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மத்தியஅரசும், தமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 7 மாவட்டங்களில் தொற்று பரவல் உயர்ந்துள்ளது என்று அறிவுறுத்தி, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் படி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பொதுமக்கள் அலட்சியமாக செயல்பட்டால் கொரோனா பரவும் ஆபத்து ஏற்படும் என்றவர், தற்போதைய நிலையில், தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கொரோனாவால் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதையும் தெரிவித்தார்.
மேலும், மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல், கூட்டம் கூடுவதாலேயே தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என்று கூறியதுடன், தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பல இடங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தெருத்தெருவாக சென்று கூறியும், தடுப்பூசி எடுத்துக்கொள்ள பலர் முன்வருவது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
7மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு – சென்னையில் மண்டலம் வாரியாக விவரம்