சென்னை: தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்க தயாராக இருப்பதாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார்.
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மறுதினம் (13ந்தேதி) தொடங்க உள்ளது. 29நாட்கள் நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் ஆகஸ்டு 27ந்தேதி பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை நடைபெற உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு வினப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. மாணவர்களிடம் விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் இருந்து 2 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்னர். அந்த மாணவர்கள் இடை நிற்காமல் அரசு பள்ளிகளில் தொடர்ந்து கல்வி பயில சிறப்பு கவனம் செலுத்தப்படும் ,
தற்போதைய நிலையில, பெரும்பான்மையான அரசு பள்ளி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். தடுப்பூசி போடதவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது என்றவர், தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என சுகாதாரத்துறை தமிழக முதல்வரிடம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே நவம்பர் 1ந்தேதி முதல் 1வது வகுப்பு முதல் பள்ளிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் நவம்பர் 1ந்தேதி முதல் 1வது வகுப்பு முதல் அனைத்து வகுப்புவரை பள்ளிகள் திறப்பு?