ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா கால்பந்து கிளப் அணிக்காக விளையாடி வந்த அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி இந்த ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

பார்சிலோனா அணியின் கேப்டனாக இருந்து வந்த மெஸ்ஸி வெளியேறியதைத் தொடர்ந்து அந்த அணிக்கான புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

செர்ஜியோ பஸ்யூட்ஸ்

2021-22 கால்பந்து சீசனில் செர்ஜியோ பஸ்யூட்ஸ் இந்த அணியின் பிரதான கேப்டனாக இருப்பார், இவருடன் ஜெரார்ட் பியூ, செர்ஜி ரொபர்டோ, மற்றும் ஜோர்டி அல்பா ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

செர்ஜியோ பஸ்யூட்ஸ், ஜெரார்ட் பியூ, செர்ஜி ரொபர்டோ ஆகியோர் ஏற்கனவே கேப்டன்களாக இருந்துவந்த நிலையில், பிரதான கேப்டனாக இருந்த மெஸ்ஸியின் விலகலை அடுத்து ஜோர்டி அல்பா புதிதாக நான்காவது கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.